News April 14, 2024

131Db சத்தம். மைதானத்தை அலற விட்ட MI

image

சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபில் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரஹானே ஆட்டமிழந்தபோது மும்பை அணியின் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அப்போது பதிவான சத்தத்தின் அளவு 131Db என பதிவாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இதுதான் அதிகப்படியான சத்தமாகும். முன்னதாக சென்னை மைதானத்தில் 130 Db பதிவானதே சாதனையாக இருந்தது.

Similar News

News January 19, 2026

இதுகூட ஸ்டாலினுக்கு தெரியாதா? அண்ணாமலை

image

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என CM-க்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர் என்றும், இதனால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்கள் என்பது கூட, ஸ்டாலினுக்கு தெரியாதா எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News January 19, 2026

காற்றின் மூலம் பவர் சப்ளை! அசத்திய விஞ்ஞானிகள்

image

பின்லாந்து விஞ்ஞானிகள் கம்பிகள் இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்தி புதிய சாதனை படைத்துள்ளனர். Helsinki மற்றும் Oulu பல்கலைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் மற்றும் லேசர் பீம்களின் உதவியுடன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மின்சாரத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர். சோதனை நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் கம்பிகளின் தேவையை குறைக்கும் என கூறப்படுகிறது.

News January 19, 2026

35 வயதை நெருங்கிவிட்டீர்களா? அலர்ட்!

image

ஸ்வீடனின் Karolinska Institutet மேற்கொண்ட ஆய்வில் 35 வயதிலிருந்தே உடல் திறன், வலிமை குறைய தொடங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இளம் வயதில் உடற்பயிற்சி செய்திருந்தாலும், இந்த வீழ்ச்சி தொடங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், வயதான பிறகும், உடற்பயிற்சியை தொடங்கியவர்கள், 5-10% வரை உடல் திறனை மேம்படுத்த முடிந்தாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டவர்களை, பல ஆண்டுகள் கண்காணித்து ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!