News December 26, 2024
1313 மெட்ரிக் டன் யூரியா நெல்லை வருகை

பிசானப்பருவ சாகுபடிக்காக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 350 மெட்ரிக் டன்னும் தென்காசி மாவட்டத்திற்கு 583, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 155, குமரி மாவட்டத்திற்கு 185 மெட்ரிக்டன்னும் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த உரம் கங்கைகொண்டான் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அவசர தேவைக்காக 80 டன் திருநெல்வேலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
பள்ளிக்கு கத்தியை கொண்டு சென்ற மாணவரால் பரபரப்பு

திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் புத்தகப்பையில் கத்தி மறைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவனின் மிரட்டலால் பயந்து முன்னெச்சரிக்கையாக கத்தி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் மூலம் தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எச்சரித்து விடுவித்தனர்.
News August 22, 2025
சூர்ஜித்துடன் செல்போனில் பேசியவர்களுக்கு சமன்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின்(27) என்பவர் கடந்த 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவர்கள் தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வரும் நிலையில் கொலை செய்த நாள் அன்று சுர்ஜித் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை சிபிசிஐடி போலீசார் கண்காணித்தனர். அதன்படி அவரது 2 உறவினர் மற்றும் நண்பரை விசாரிக்க சம்மன் அனுப்பினர்.
News August 22, 2025
நெல்லை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி பணி

நெல்லை இளைஞர்களே; பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <