News October 23, 2025
Super Computer-ஐ விட 13,000 மடங்கு வேகம்: கூகுள் சாதனை

அறிவியலின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகிலேயே அதிவேகமாக இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13,000 மடங்கு வேகத்தில் இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் Algorithm-ஐ உருவாக்கி கூகுள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ‘Quantum Echoes’ என்ற இந்த Algorithm புதிய மருந்து கண்டுபிடிப்பு, Material Science துறைகளில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 26, 2025
நிலுவை வழக்குகளும்.. கோர்ட் விடுமுறைகளும்!

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?
News October 26, 2025
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. உயிர்கள் பலியான சோகம்

ஒருபக்கம் ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்த, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க பொருளாதார தடைகளை விதித்து, பேச்சுவார்த்தைக்கும் முயற்சி செய்து வருகிறார் டிரம்ப். மறுபக்கம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
News October 26, 2025
ஆன்லைன் டிக்கெட் புக்கிங், இனி தயாரிப்பாளருக்கும் ஷேர்!

படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு ஷேர், தயாரிப்பாளர்களுக்கும் தரப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், புக்கிங் நிறுவனம் என மூவருக்கும் பங்கை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


