News September 27, 2025
BOSCH நிறுவனத்தில் இருந்து 13,000 பேர் நீக்கம்

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான BOSCH-ல் இருந்து 13,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே AI-ன் அசுர வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களிலும் வேலை நீக்கம் நடைபெற்று வருகிறது.
Similar News
News September 27, 2025
Sports Roundup : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

*பார்வையற்றோர் கால்பந்து போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. *ஜப்பான் ஓபன் டென்னிஸில் ரோகன் போபண்ணா டகேரு யூசுகி இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஜூனியர் மகளிர் ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம் 3-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. *ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 10மீ ஏர் பிஸ்டலில் இந்தியாவின் 16 வயதான ஜோனாதன் ஆண்டனி தங்கம் வென்று அசத்தல்.
News September 27, 2025
திமுகவில் அதிரடி.. 10 பேரின் பதவி பறிப்பா?

EX MLA கார்த்திக், கோவை மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்சிக்குள் களையெடுப்பு பணியை தீவிரப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக, தேர்தல் & கட்சிப் பணியில் சுணக்கம் காட்டிய, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை சரியாக முன்னெடுக்காத 10 மாவட்டச் செயலாளர்களின் பதவியை பறித்து, அவர்களுக்கு பதில் புதியவர்களை நியமிக்க DMK தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
News September 27, 2025
நகத்தில் இப்படி இருக்கா.. கவனியுங்க!

ஒருவரின் கை நகத்தின் கலரை வைத்தே அவரின் ஹெல்த் பற்றி சொல்லிவிடலாம் தெரியுமா? ✦நகத்தின் நடுவில் வெள்ளை : கல்லீரல் பிரச்னை ✦கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயாக இருக்கலாம் ✦மஞ்சள் நிறம்: தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு ✦வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது. ✦ஆரோக்கியமான நகங்கள் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும். SHARE.