News March 26, 2025
1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பத்தூர்!

ஏலகிரியில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவரின் சொந்தமான இடத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. எனவே 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் என்று வழங்கப்பட்ட பெயர் இன்றும் தொடர்வதாக கூறப்படுகிறது.
Similar News
News November 14, 2025
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவி சாதனை!

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.ஜீவிதா (13-11-2025), திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசு நடத்தும் இலக்கிய மன்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் எஸ். ஜீவிதா என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
News November 14, 2025
திருப்பத்தூர்: கோடி கணக்கில் விபூதி; நகைக்கடை ஓனர் கைது

வாணியம்பாடி நகைக்கடை பஜாரில், ரூபி ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி தங்கம் விலை தொடர்ந்து, உயர்ந்த வருவதாகவும் பணத்தை முதலீடு செய்தால் லாபத்தில் 25 சதவீதம், வரை லாபம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம், சுமார் ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த செந்தில்குமார் தலைமறைவாக, இருந்த நிலையில், அவரை சென்னை சைதாப்பேட்டையில் இன்று (நவ.14) வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
News November 14, 2025
திருப்பத்தூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு.<


