News March 26, 2025
1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பத்தூர்!

ஏலகிரியில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவரின் சொந்தமான இடத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. எனவே 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் என்று வழங்கப்பட்ட பெயர் இன்றும் தொடர்வதாக கூறப்படுகிறது.
Similar News
News December 16, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 16, 2025
திருப்பத்தூர் காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.16) குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்ற செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணம் பற்றிய புகார்கள் 1098 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருப்பத்தூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <


