News August 17, 2025
13.72 லட்சம் மனுக்கள்.. வேகமெடுக்கும் பரிசீலனை!

ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசீலனை முடிந்தபின் இம்மாத இறுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
ஈரான்-அமெரிக்கா போர்.. கிம் ஜாங் உன் மீம்ஸ்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, வட கொரிய கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை வைத்து மீம்ஸ் பரவி வருகின்றன. ஏவுகணை சோதனைகளுக்கு பெயர் பெற்ற கிம், போருக்கு யாரும் அழைக்கவில்லை என்று வருத்தப்படுவது போன்றும், ஆயுதங்களுடன் காத்திருப்பது போன்றும் பல்வேறு மீம்கள் வலம் வருகின்றன. அதில் சிலவற்றை மேலே பகிர்ந்துள்ளோம். SWIPE & SHARE.
News March 5, 2026
தம்பதியரே, இதை கவனியுங்கள்

நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு, வீடு பராமரிப்புக்கு, குடும்பத்தினர், நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள் உங்கள் கணவன் (அ) மனைவியுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். சமநிலையில் உள்ளதா? இல்லையெனில், இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கை முக்கியமானது. சரி தானே?
News March 5, 2026
ஈரானுக்கு சீனா உதவியதா?

சீனா ஈரானுக்கு ரகசியமாக ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தை வழங்கி உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் ஆதரவு இல்லாமல் ஈரான் இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், ஈரான் அதன் எதிரிகள் மீது நடத்தி வரும் துல்லியமான தாக்குதல்களை மேற்கோள் காட்டி பின்னணியில் சீனா இருப்பதாக பலரும் விவாதித்து வருகின்றனர்.


