News March 6, 2025
13 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அழைப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை சரகத்தில் 13 வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக, மினி பேருந்துகளை இயக்க அனுமதி சீட்டு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
JUST IN கவின் கொலை வழக்கு; ஒருவருக்கு பிடிவாரண்ட்

திருநெல்வேலி நீதிமன்றத்தில் இன்று கவின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. சுர்ஜித்தின் தாயான உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி அவரது கணவர் சரவணன் மகன் சுர்ஜித் உறவினர் ஜெயபாலன் ஆகிய நான்கு பேர் மீது நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. கிருஷ்ணகுமாரியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றதை தொடர்ந்து திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
News November 14, 2025
நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<


