News November 16, 2024
13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 83 வயது முதியவர் கைது

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை தாத்தா முறை கொண்ட நாகராஜ்(83) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், சிறுமி இரண்டு மாதம் கர்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நாகராஜை போக்சோ வழக்கில் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 4, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
தி.மலை: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

தி.மலை மக்களே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 4, 2025
தி.மலை: சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்!

தி.மலை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க தி.மலை மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.