News July 12, 2024

13ம் தேதி பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 13/7/2024ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு,மேற்கு,திருவெறும்பூர் ஸ்ரீரங்கம்,மணப்பாறை லால்குடி,முசிறி, மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு,ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 27, 2025

திருச்சி: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

News April 27, 2025

திருச்சியில் SBI வங்கியில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

News April 27, 2025

மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா 

image

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து மே.1ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மே.9ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!