News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
Similar News
News April 5, 2025
7 சவரன் செயினை பறித்த சுடிதார் கொள்ளையன்

பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியை அபிதா 49. இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சுடிதார் அணிந்து வந்த கொள்ளையன், அபிதா அணிந்திருந்த ஏழு சவரன் செயினை பறித்துச் சென்றான். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று எஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி ஜாபர்சித்திக் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
News April 5, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 4 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாலாஜா ராணிப்பேட்டை ஆற்காடு சிப்காட் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100
News April 4, 2025
தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 1856 ஜுன் 1ம் தேதி ராயபுரம் டூ வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் தான் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.ராயபுரம் ரயில்நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயிலும் இது தான். ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெருமை பறைசாற்றும் இந்த அரிய தகவலை ஷேர் பண்ணுங்க…