News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 12, 2025

திருமண வரம் தரும் மயூரநாதர் கோயில்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். அகத்தியருக்கு கைலாய மலையில் இருந்து சிவன் திருமண காட்சியை அருளிய தலம் என்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News April 12, 2025

ராணிப்பேட்டை சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர்  பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த வட்டாரங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<> இணையதளத்தில்<<>> வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

error: Content is protected !!