News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல், இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

பயிர் காப்பீடு திட்டம்-ஆட்சியர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா -2) மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.11) தெரிவித்துள்ளார். மேலும், தேவையான ஆவணங்களை பயன்படுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் 88,630 பயனாளிகள் பயன்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் நலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 88,630 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ.11) அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!