News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 16, 2025

ரூ. 10 இலட்சத்தில் குழந்தை நேய சூழல் உருவாக்கப்படும்

image

தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதலாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் ஒளி/ஒலி காட்சி வசதிகள், குழந்தைகளுக்குரிய உட்புற வசதிகள் மற்றும் கண்கவர் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை நேய சுழல் தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ. 10 இலட்சத்தில் உருவாக்கப்படும் என இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்தார்

News April 16, 2025

பாலக்கோடு: ஏரியில் மூழ்கி தொழிலாளி சடலமாக மீட்பு

image

தொம்பகாரம்பட்டியை சேர்ந்த தொழிலாளி விக்னேஷ் என்பவர் நேற்று முன்தினம், தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி ஏரிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, விக்னேஷ் நீரில் மூழ்கினார். அங்கு வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அன்று மாலை முதல், தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஏப்ரல் 15 விக்னேஷ் சடலத்தை மீட்டனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!