News April 5, 2025
போலீசில் 1,299 பணியிடங்கள்.. சம்பளம் ₹1.16 லட்சம்

தமிழ்நாடு போலீஸில் 1,299 SI, 2ஆம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்து, 20- 30 வயதுடையோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹36,900 -₹1,16,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் துறை ரீதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தனித்தனியாக எழுத்து தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 24, 2025
54 பந்துகளில் 150 ரன்கள்.. சூர்யவன்ஷி உலக சாதனை

VHT-ல் வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியுள்ளார். APR-க்கு எதிரான போட்டியில் 84 பந்துகளை எதிர்கொண்டு, 16 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 190 ரன்கள் குவித்துள்ளார். 12-வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்த அவர் ‘Fastest 150’ ரெக்கார்ட்டையும் படைத்துள்ளார். அச்சாதனையை டி வில்லியர்ஸ் 64 பந்துகளில் படைத்த நிலையில், தற்போது அதை 54 பந்துகளில் அடித்து வைபவ் முறியடித்துள்ளார்.
News December 24, 2025
குழந்தை இல்லையா? இந்த 5 விஷயங்களை கவனிங்க!

சில தம்பதிகளுக்கு கருத்தரிப்பது தாமதமாகலாம். இதற்கு தீர்வுகாண பின்வரும் 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ✱உடல் எடையை கட்டுப்பாட்டில் வையுங்கள் ✱தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை பராமரியுங்கள் ✱சீரற்ற மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யுங்கள் ✱சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பாதிப்பை சரி செய்து கொள்ளுங்கள் ✱விந்தணு பகுப்பாய்வு செய்து குறைபாடுகளை கண்டறியுங்கள். அப்புறமென்ன, குவா குவா தான்!
News December 24, 2025
ஹைடெக் வசதியுடன் அரசு வால்வோ பஸ் சேவை

சென்னையில் ₹34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன வால்வோ AC பஸ்களின் சேவையை CM ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பஸ்ஸில் ஏறி அதிலுள்ள வசதிகளை நேரடியாக ஆய்வு செய்தார். மொத்தம் 51 பேர் பயணிக்க கூடிய இந்த பஸ்ஸில் டிவி, செல்போன் சார்ஜ், ரீடிங் லைட், அதிக லெக் ஸ்பேஸ் வசதிகள் உள்ளன. மணிக்கு 120 கிமீ வேகத்தில் ஓடும் இந்த பஸ்ஸில் 12 தானியங்கி கியர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.


