News May 10, 2024
129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News November 20, 2024
தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.
News November 20, 2024
தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை வெளியீடு
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ22) காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கி பயன் பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி 2025 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 24ஆம் தேதி காலை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள சான் கிரிக்கெட் அகடாமியில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.