News May 10, 2024
129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News September 17, 2025
தூத்துக்குடி- சென்னை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு

தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செப்டம்பர் 29 அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில் சென்னையிலிருந்து செப்டம்பர் 30 அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது.
News September 17, 2025
தூத்துக்குடி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

தூத்துக்குடி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:0461-2325606. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
News September 17, 2025
தூத்துக்குடி: 12.86 கோடி வரிபாக்கி பெண் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த கிளமென்ஸி என்ற பெண்ணுக்கு, ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. எவ்வித தொழிலும் செய்யாத ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு வரி பாக்கி வந்திருப்பதால் அதிர்ச்சி அடைந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.