News January 3, 2025
வங்கியில் 1267 பணியிடங்கள்: ₹63,840 வரை சம்பளம்

பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து 42 வயது மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ₹36,000 – ₹63,840 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
Similar News
News November 5, 2025
கூட்டணி.. சற்றுநேரத்தில் விஜய் முக்கிய அறிவிப்பு

விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் ‘கூட்டணி’ தொடர்பாக முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி, விஜய் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை செய்யும் விஜய், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News November 5, 2025
நாட்டின் டாப் 10 பணக்கார மாநகரங்கள் இதுதான்!

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், நாட்டின் மாநகரங்களின் பொருளாதார மதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் எந்த மாநகரம் அதிக மதிப்பு கொண்டது என்பதை அறிய, மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. இதில், ஆச்சரிய விஷயம் என்னவென்றால், நாட்டின் 4-வது பணக்கார நகரமான பெங்களூருவை விட அம்பானியின் சொத்து மதிப்பு அதிகம்.
News November 5, 2025
அதிருப்தியில் இருக்கிறாரா திமுகவின் மாஜி அமைச்சர்?

அமைச்சர் பதவி பறிபோன பிறகு அப்செட்டில் இருந்த செஞ்சி மஸ்தான், எப்படியோ விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியை வாங்கிவிட்டார். ஆனாலும், அவருக்கு பழையபடி கட்சியினர் மத்தியில் மவுசு இல்லையாம். இதனால், தலைமையிடம் வக்ஃபு வாரிய தலைவர் பதவியை அவர் கேட்டதாக பேசப்படுகிறது. ஆனால், தலைமை அசைந்துக் கொடுக்காததால் மஸ்தான் அதிருப்தியில் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.


