News August 22, 2025

கப்பற்படையில் 1,266 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய கப்பற்படையில் ‘டிரேட்ஸ்மேன்’ பிரிவில் காலியாகவுள்ள 1,266 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷிப் பில்டிங் டிரேடு, இன்ஜின் டிரேடு, மெஷின் டிரேடு உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: +2. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்து & திறனறித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

Similar News

News August 22, 2025

கட்சியில் அடுத்த வாரிசுக்கு பதவி.. முக்கிய திருப்பம்

image

பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். GK மணி, அருள்மொழி, முரளி சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீகாந்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக கட்சியின் நிகழ்ச்சிகளில் ராமதாஸுக்கு அருகில் அமர்ந்து வந்த ஸ்ரீகாந்தி, தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சிக்குள் நுழைந்துள்ளது அன்புமணி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News August 22, 2025

சில்லித்தனமான செயல்களில் திமுக ஈடுபடாது: பி.மூர்த்தி

image

தவெக மாநாட்டுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா மேடையிலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூர்த்தி, தவெக மாநாட்டுக்கு தாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை என கூறியுள்ளார். சேர் கொடுக்க மறுப்பது, வாய்க்கால் தோண்டுவது போன்ற எந்தவித சில்லித்தனமான செயல்களிலும் திமுகவினர் ஈடுபட மாட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

News August 22, 2025

BREAKING: விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அத்துறையின் ஆணையர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில், VPRC, PLF மூலமாக தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு வாரம் ஒருமுறை சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்கள் நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர்.

error: Content is protected !!