News March 25, 2025
12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன

சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் 42,46,751 பிறப்பு சான்றிதழ், 15,82,041 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 46,04,976 பிறப்பு சான்றிதழ்களும், 14,92,284 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் 43,01,961 பிறப்பு சான்றிதழ்களும், 12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News November 17, 2025
சென்னையில் பிரபல நடிகர் வீட்டிற்கு வந்த மிரட்டல்

திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் இன்று (நவ-17) காலை வந்த தகவலை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அவரது வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சென்னையில் எவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 17, 2025
சென்னை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

சென்னை: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
சென்னை: கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி பலி

ஆவடியை சேர்ந்த கோனாம்பேடு, ரெட்டிபாளையம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜா- திவ்யா தம்பதி. ராஜா புதிதாக கார் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு காரை பார்க்கிங் செய்ய வீட்டின் பின் புறம் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கணவர் ராஜா பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியாதல் திவ்யா மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


