News April 15, 2025
125 ஆண்டு பழமையான ஒப்பந்தம்: சிக்கிய சோக்ஷி

வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை கைது செய்ததற்கு 125 ஆண்டு பழமையான ஒப்பந்தமே காரணமாம். சுதந்திரத்திற்கு
முன்பாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் 1907 ல் இரு நாட்டுக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், பணமோசடியில் சிக்குவோரை பரஸ்பரம் நாடு கடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அது தான் வங்கியை மோசடி செய்த சோக்ஷியை பிடிக்க உதவியிருக்கிறது.
Similar News
News April 19, 2025
குருப்பெயர்ச்சி: 6 ராசியினர் மிகுந்த கவனம் தேவை

குரு பகவான் விரைவில் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். ஆதலால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிலர் முதுகில் குத்தவும், பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.
News April 19, 2025
கைதான கொஞ்ச நேரத்திலேயே நடிகருக்கு ஜாமின்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் <<16150071>>ஷைன் டாம் சாக்கோ<<>>விற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் கைதாவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு வழக்கில் அவர் 2 மாதம் சிறையில் இருந்தார்.
News April 19, 2025
இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.