News August 20, 2025
121 கிலோ தங்கம்… கடவுளுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹140 கோடி மதிப்பு கொண்ட 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தொழில் தொடங்கிய இவர், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தருக்கு சொந்தமான நிறுவனத்தின் 60% பங்குகள் மட்டும் ரூ.6,000 கோடியாம்.
Similar News
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டில் மீண்டும் பெரிய விபத்து

தவெக மாநாட்டில் பிற்பகலில் <<17463695>>கொடிக்கம்பம் விழுந்து<<>> கார் சேதமடைந்த விபத்தை தொடர்ந்து மற்றொரு விபத்து அரங்கேறியுள்ளது. மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலில் ராட்சத போக்கஸ் லைட்டுகள் கட்டப்பட்ட கம்பம் கீழே விழுந்து கண்ணாடி துண்டுகள் சிதறின. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநாட்டு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்ய விஜய் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 20, 2025
Prayer-க்கு வரலையா? ஜெயில் கன்ஃபார்ம்.. வினோத சட்டம்

மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்கு வராவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹53,422 – ₹61,794 அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் இருந்து விடுபட முடியும் எனவும் ஆளும் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமிக் கட்சி எச்சரித்துள்ளது. இந்த சட்டத்த பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?
News August 20, 2025
FLASH: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிகிலி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் இருந்த குளத்தில் குழந்தைகள் குளித்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5-ம் வகுப்பு மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. So Sad..!