News May 24, 2024

121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள்

image

எம்.பி தேர்தலில் போட்டியிடும் 121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என ADR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 359 பேர் 5ஆம் வகுப்பு வரையிலும், 647 வேட்பாளர்கள் 8ஆம் வகுப்பும், 1303 பேர் 12ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1,502 பேர் பட்ட படிப்பை முடித்துள்ளனர். மிகவும் சொற்பமாக, 198 வேட்பாளர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பெற்றுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Similar News

News March 22, 2026

நள்ளிரவில் பசி எடுக்குதா?

image

இரவு உணவு உண்ட பிறகும் நள்ளிரவில் பசி எடுக்கிறதா? அந்த நேரத்தில் பாஸ்ட் புட்களை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டும். நள்ளிரவு பசியைக் கட்டுப்படுத்த நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இரவு உணவில் பருப்பு, முட்டை, பனீர், கோதுமை ஆகியவற்றை சேர்ந்துகொண்டால் வயிறு நிறைந்துவிடும் என்றும் நாள் முழுவதும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

News March 22, 2026

விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்குமா?

image

போர் காரணமாக ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் (ATF) விலைகளும் உயர வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் டிக்கெட் கட்டணங்களில் ஏற்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் சமீபத்தில் கூறினார். இதற்கிடையில், சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.

News March 22, 2026

10 மாதம் தொடர்ந்து பறக்கும் பறவை

image

Common Swift என்ற பறவை தரையிறங்காமல் தொடர்ந்து 10 மாதங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும் இந்தப் பறவைகள், இடையில் எங்கும் நிற்பதில்லை. 40 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த பறவையின் இறக்கைகள் அதிக ஆற்றலைச் செலவழிக்காமல் நீண்ட நேரம் காற்றில் மிதக்க உதவுகின்றன. இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தரையிறங்குகின்றன.

error: Content is protected !!