News March 22, 2025

1200 வருட பழமையான கால பைரவர் கோவிலில் பூஜை

image

நல்லம்பிள்ளை வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள 1200 வருட பழமையான ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெருக்கிறது. இதில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகை தருவதால் போக்குவரத்தை சரி செய்ய காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Similar News

News November 16, 2025

தருமபுரி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, நாளை முதல் வருகிற டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

தருமபுரி: காய்ச்சலால் உயிரிழந்த 6 மாத சிசு?

image

தருமபுரி, பெரும்பாலை இந்திரா நகர பகுதியை சேர்ந்த கணேசன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்க குழந்தையும் தூங்கியுள்ளது. நெடுநேரமாகியும் கண் விழிக்காததால், தனியார் டாக்டர்களிடம் கொண்டு சென்றபோது, குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 16, 2025

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!