News February 15, 2025

உலகம் முழுவதும் 120 உள்நாட்டு யுத்தங்கள்: ICRC

image

உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் நடப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அச்சங்கத் தலைவர் மிர்ஜானா ஸ்பால்ஜாரிக், சண்டைகளினால் பேரழிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதை பழைய நிலைக்கு கொண்டு வர பெரும் செலவு ஆகும் என்றும் குறிப்பிட்டார். சண்டையை முடிவுக்கு காெண்டு மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

Similar News

News March 7, 2026

கட்சி மாறியது ஏன்? OPS

image

கட்சிக்கு விசுவாசமாக இருந்த தன்னை EPS திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாக OPS குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவை வஞ்சகமாக EPS அபகரித்துக் கொண்டதாகவும் சாடியுள்ளார். ஆனால், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதற்கு இலக்கணமாக, தன்னை ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 7, 2026

சுந்தர் பிச்சைக்கு ₹6,361 கோடி சம்பளம்!

image

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு $692 மில்லியன் (₹6,361 கோடி) சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். 2004-ல் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆக பதவியேற்றார். அதன்பிறகு கூகுள் சந்தை மதிப்பு 7 மடங்கு உயர்ந்தது. தற்போது AI தொழில்நுட்ப போட்டியிலும் கூகுள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

News March 7, 2026

விவாகரத்து பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்: விஜய்

image

முதல்முறையாக விவகாரத்து வழக்கு பற்றி மறைமுகமாக விஜய் பேசியுள்ளார். ஏற்கெனவே உள்ள நிறைய பிரச்னைகளில் சமீபத்தில் மேலும் ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீங்கள் போராடி வருத்தப்படுவதை பார்த்து நானும் வருந்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன்; நல்லதே நடக்கும் என்றும் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் விஜய் பேசினார்.

error: Content is protected !!