News March 26, 2025
4 வயது சிறுவனை கொன்ற 12 வயது சிறுமி

போபாலில் 12 வயது சிறுமியுடன் விளையாடிய 4 வயது சிறுவன் மாயமாகி இருக்கிறான். அதன்பின், சிறுமி முன்னுக்கு பின் முரணாக பல பதில்களை கூறியிருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை விசாரித்த பெண் போலீஸ், சாமி வந்தது போல நாடகமாடியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி, சிறுவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். 50 போலீசார் தேடியும் கிடைக்காத சிறுவன், இறுதியில் நாடகத்தின் மூலம் பிணமாக மீட்கப்பட்டான்.
Similar News
News November 15, 2025
பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.
News November 15, 2025
J.K.ரௌலிங் பொன்மொழிகள்

*உலகை மாற்றுவதற்கு நமக்கு மந்திரம் தேவையில்லை. நமக்குத் தேவையான எல்லாச் சக்தியையும் நாம் ஏற்கனவே நமக்குள் சுமந்து செல்கிறோம். *நாம் அனைவரும் நமக்குள் அதிசயங்களை வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. *அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனைதான் அடித்தளம். *நான் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன், பெரும்பாலும் இரண்டாவதை அடைவதற்கு முதலாவது வழிநடத்துகிறது.
News November 15, 2025
ஆணவக்கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

கிருஷ்ணகிரியில் சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகனை கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் நடந்த இந்த சம்பவத்தில், ஊருக்கு வந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுசயாவையும் தண்டபாணி வெட்டினார். அப்போது, தடுக்க வந்த தனது தாயார் கண்ணம்மாவையும் வெட்டினார். இதில், மகனும், தாயாரும் உயிரிழந்த நிலையில், மருமகள் அனுசயா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.


