News March 17, 2024
12 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம்

நாடு முழுவதும் உள்ள பெண் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 47.1 கோடி என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். இதில், 1.89 கோடி பெண்கள் புதிதாக இணைந்துள்ளதாக கூறிய அவர், 12 மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாட்டில் மொத்தமுள்ள 96.8 கோடி வாக்காளர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள் என்றும் தேர்தலில் பெண்களும் சமமான அளவில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News July 5, 2025
பெஞ்சமின் ரோலில் சிம்பு? எப்படி இருந்திருக்கும்?

‘Eleven’ படத்தின் கதையை சிம்புவுக்காக எழுதியதாக அதன் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். STR உடன் இணைந்து பணியாற்றவும் அவர் விருப்பம் தெரிவித்தார். சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியான ‘லெவன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெஞ்சமின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.
News July 5, 2025
மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான்

வனப்பகுதியில் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி, ஆக.3-ல் தான் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். ஜூலை 10-ல் ஆடு, மாடுகளின் மாநாட்டை மதுரையில் நாதக நடத்தவுள்ளது. முன்னதாக, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார் சீமான். தொடர்ந்து ‘மரங்களோடு பேசுவோம்; மரங்களோடு வாழ்வோம்’ என்ற மரங்களின் மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேறு என்ன மாநாடு நடத்தலாம்?
News July 5, 2025
அஜித் குமார் மரணம்… பொங்கி எழுந்த ராஜ்கிரண்

அஜித் குமார் லாக்-அப் மரணத்திற்கு திரை பிரபலங்கள் குரல் கொடுக்காமல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸ் அடித்தே கொன்ற கொடுங்கொலையை நினைத்து நெஞ்சம் பதறுவதாக தெரிவித்த அவர், அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவை இதுவரை கைது செய்து விசாரிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். தாடி பாலாஜியும் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்திருந்தார்.