News October 1, 2025
CM ஸ்டாலினுக்கு நயினார் எழுப்பும் 12 கேள்விகள்

கரூர் துயரம் தொடர்பாக CM ஸ்டாலினுக்கு 12 கேள்விகளை நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார். கரூர் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயங்குவது ஏன்? பெரிய அரசியல் பேரணி நடக்கும் வேளையில் SP கரூரில் இல்லாத காரணம் என்ன? விஜய் பரப்புரையின் கூட்டத்தை சரியாக மதிப்பிடாதது எதனால்? உள்பட 12 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். மேலும், திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே கரூர் துயரத்திற்கான காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
Similar News
News October 1, 2025
போதைப்பொருளுடன் சென்னையில் நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ₹40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை விமான நிலையத்தில் பாலிவுட் துணை நடிகர் விஷால் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Student of the Year உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக விஷால் நடித்திருக்கிறார்.
News October 1, 2025
விண்வெளியில் கரம் கோர்க்கும் ஹாலிவுட் ஜோடி?

ஹாலிவுட் நடிகர் <<17246269>>டாம் குரூஸ் <<>>(63), நடிகை அனா டி அர்மாஸ் (37) விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாகச விரும்பிகளான இருவரும், தங்களது திருமணத்தை புதுமையான முறையிலும், என்றும் நினைவில் இருந்து நீங்காத வண்ணம் இருக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, டாம் குரூஸுக்கு 3 முறை திருமணம் நடந்து விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.
News October 1, 2025
2018ல் USA அரசு முடங்கியது ஏன்?

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட்டில் நிறைவேறாததால், <<17883569>>USA முடங்கியுள்ளது<<>>. இதேபோல 2018-ல், 35 நாட்களுக்கு முடங்கிப்போனது அந்நாட்டு அரசு. அப்போது, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 5.7 பில்லியன் டாலர் நிதியை செனட் ஒதுக்கவில்லை. இதனால், டிச.22, 2018 – ஜன.25, 2019 வரை ஷட் டவுன் ஏற்பட்டது. USA வரலாற்றிலேயே அதிக நாட்கள் இந்த ஷட் டவுன் நீடித்ததால் 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.