News May 1, 2024

சமையல் சிலிண்டர் பயன்பாடு 12% அதிகரிப்பு

image

நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் அதன் பயன்பாடு 2.67 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், ஏப்ரலில் 2.45 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2023 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 12% உயர்ந்துள்ளது. மேலும், 2020 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 26.9%, கடந்த 2022 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 9% அதிகரித்துள்ளது.

Similar News

News March 17, 2026

தொகுதி பங்கீடு பிரச்னை…. CPM எழுப்பும் கேள்வி

image

காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கும் போது CPM-க்கு வழங்குவதில் என்ன சிக்கல் என சண்முகம் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் 60 தொகுதிகள் கூட வாங்கிக் கொள்ளட்டும்; அதைப் பற்றி தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால், காங்., கூடுதலாக கொடுக்க வாய்ப்பிருக்கும் போது ஏன் இடதுசாரிகளுக்கு குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 17, 2026

மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

image

திமுகவில் OPS இணைந்ததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், யூனியன் வீரமணி(2021-ல் திருவிடைமருதூர் வேட்பாளர்) உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த OPS அணியின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில், மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற EPS, தேர்தலில் பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

News March 17, 2026

ஈரானில் இருந்து பத்திரமாக வெளியேறிய 550 இந்தியர்கள்

image

போருக்கு மத்தியில் ஈரானில் சிக்கி இருந்த 550 இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரை மேற்கொண்ட 284 பேர் மற்றும் மாணவர்கள் உள்பட 550 பேரும் ஆர்மீனியா வழியாக ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து சவாலான காலத்தில் உதவிய அர்மீனியா அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!