News April 4, 2024
12 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந் நிலையில், ஈரோட்டில் அதிகபட்சமாக இன்று 41.11 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி F) வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல, கரூர், சேலம், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூரில் 40 டிகிரி செல்சியஸ், திருத்தணி, மதுரை, வேலூர், நாமக்கல்லில் 39.44 டிகிரி செல்சியஸ், கோவை, தஞ்சையில் 38.33 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
Similar News
News January 19, 2026
தருமபுரியில் மின் தடை! உங்க ஏரியா இருக்கா?

வெள்ளிசந்தை துணைமின் நிலையத்தில் நாளை (ஜன.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம்,மோட்டூர், மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 19, 2026
உலக சந்தையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,673-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $5 உயர்ந்து $93.75 ஆக உள்ளது. இதனால், இன்று(ஜன.19) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும். ஈரான், வெனிசுலா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச பிரச்னைகளே தங்கம் உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 19, 2026
இனி ஜடேஜா வேண்டாம்..

NZ-க்கு எதிரான ODI தொடரில் ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளையும் சேர்த்து வெறும் 43 ரன்களை மட்டுமே அடித்த அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவரை ODI அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என பலரும் கமெண்ட் செய்கின்றனர். மேலும், அவருக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


