News October 23, 2024
12.5 டன் ரேஷன் அரிசி கடத்திய கேரளாவைச் சேர்ந்தவர் கைது
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் உள்ள குடோனில் இருந்து லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த இருந்த 12.5 டன் மதிப்புள்ள 300 மூட்டை ரேஷன் அரிசி இன்று (அக்.22) பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த சோஜி என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 20, 2024
போலீயான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சி ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்தி வெளியிட்டு வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அது குறித்த அறிவிப்பு பேரிடர் மேலாண்மை பிரிவு மூலம் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்கள் தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 20, 2024
மக்கள் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் – ஆட்சியர்
நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.