News November 19, 2025
12 பேரை திருமணம் செய்த பெண் (PHOTO)

போலீஸ் அதிகாரி உள்பட 12 பேரை திருமணம் செய்து ₹8 கோடி சுருட்டிய பெண் போலீசில் சிக்கியுள்ளார். உ.பி., கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி செளத்ரி(30) ஆசிரியை என்ற போர்வையில் உலா வந்துள்ளார். Bank மேனேஜர்கள் 3 பேரை திருமணம் செய்துவிட்டு சிக்கியபோது, சில போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார். முன்பின் தெரியாத இதுபோன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கின்றனர். உஷார்..!
Similar News
News April 13, 2026
CBSE 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதிய அப்டேட்!

CBSE 10-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் தேர்வு முடிவுகளை https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வுகளில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 10-ம் வகுப்பு இரண்டாம் பருவ பொதுத் தேர்வு மே 15 முதல் நடைபெறவுள்ளது.
News April 13, 2026
திமுக பொய் பிரசாரம் செய்கிறது: அண்ணாமலை

திமுக SM-ல் பொய் பிரசாரம் செய்வதாக சாடிய அண்ணாமலை, அளவுக்கு அதிகமான விளம்பரம் முகச்சுளிப்பையே ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமான விளம்பரம் செய்தால் தோல்வியில்தான் முடியும் என்பதை திரைப்படங்கள் மட்டுமல்ல, இதற்குமுன் நடந்த பல தேர்தல்களும் உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News April 13, 2026
USA-வுக்கு பெரிய பாடம் கற்பிப்போம்: ஈரான்

USA உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் மிக சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதாக சபாநாயகர் முகமது கலிபாஃப் கூறியுள்ளார். இது பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததாக கூறிய அவர், ஆனால் USA தர்க்கரீதியாக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தால் நாங்களும் ஒத்துழைப்போம் இல்லை சண்டைதான் வழி என்றால் அதற்கும் தயார் என்றார். மேலும், தங்களின் மன உறுதியை சோதித்தால் பெரிய பாடம் கற்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.


