News January 24, 2026
12 தொகுதிகள்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த கமல்

திமுகவுடன் கமலின் மநீம விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மநீமவுக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள 12 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக வலியுறுத்தும் நிலையில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட கமல் உறுதியாக இருப்பது அறிவாலய தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
Similar News
News February 12, 2026
போன் திருட்டு.. இந்த ட்ரிக் மூலம் கண்டுபிடிக்கலாம்

உங்கள் போன் தொலைந்து விட்டதா அல்லது திருடுபோனதா? போலீசில் புகாரளிப்பதற்கு முன் இதை செய்யுங்கள். ➤மற்றொரு ஸ்மார்ட்போன் (அ) லேப்டாப்பை எடுத்துக் கொள்ளுங்கள் ➤தொலைந்த போனில் உள்ள Gmail id-ஐ இதில் Login செய்யுங்கள் ➤Find My Device என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நீங்கள் தேடும் Device-ஐ க்ளிக் செய்யுங்கள் ➤சில நொடிகளில், உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் Location-ஐ காணமுடியும். SHARE.
News February 12, 2026
சபாநாயகர் சேரில் அமர மாட்டேன்: ஓம் பிர்லா

தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முடிவு கிடைக்கும் வரை சபாநாயகர் நாற்காலியில் அமரப் போவதில்லை என ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார். பார்லி.,யில் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக எதிர்கட்சி MP-க்கள் 118 பேர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். இதன்மீது மார்ச்.9-ல் விவாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஓம் பிர்லா இம்முடிவை எடுத்துள்ளார்.
News February 12, 2026
சீமானை ஒருமையில் சாடிய நாஞ்சில் சம்பத்

TN-ல் திமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். குறிப்பாக தமிழ்தேசியம் என்ற பெயரில் சில்லறை பயல் சீமான் அருவருப்பான அரசியலை செய்துவருகிறார் என கடுமையாக சாடியுள்ளார். மேலும், தற்போது மாட்டுக்கு பின்னால் நின்று முட்டாள்தனமாக சீமான் அரசியல் செய்கிறார் எனவும், விஜய் செல்லும் ஊரில் எல்லாம் சீமானின் கட்சி சமாதி ஆகிவருவதாகவும் அவர் பேசியுள்ளார்.


