News January 14, 2026

12 தொகுதிகளை கேட்டு ஷாக் கொடுக்கும் ஜி.கே.வாசன்!

image

தனது ராஜ்யசபா MP பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மாநில அரசியலில் கவனம் ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளாராம். அதனால், NDA கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு EPS-க்கு ஜி.கே.வாசன் ஷாக் கொடுத்துள்ளதாக தமாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு பின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை தயார் செய்ய உள்ளதாகவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News February 18, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 18, மாசி 6 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News February 18, 2026

நெதர்லாந்தை அடித்து நொறுக்க காத்திருக்கும் இந்தியா

image

ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா வரும் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் தனது கடைசி லீக் போட்டியில் இன்று நெதர்லாந்துடன், இந்தியா மோத உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய தயாராக உள்ளது. இந்த ஆட்டத்தில், இதுவரை போதிய வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 18, 2026

கண் கருவளைய பிரச்னையா? இதை ட்ரை பண்ணுங்க..

image

மன அழுத்தம், தூக்கமின்மை, மரபணு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே சரிசெய்ய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ▶வெள்ளரிக்காய்: தினமும் இரவில் இதை வைப்பது கருவளையத்தைப் போக்க உதவும். ▶ஐஸ் க்யூப் மசாஜ்: இது இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தைக் குறைத்து கருவளையத்தைக் குறைக்கும். ▶கற்றாழை ஜெல்: சருமத்திற்கு பொலிவூட்டி, கருவளையங்களைக் குறைக்கும்.

error: Content is protected !!