News February 26, 2026
12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது

விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டி வடக்கு தெருவில் உள்ள முருகன் கோயில் முன்புள்ள கிணற்றின் அருகே பெரிய மலைப்பாம்பு ஒன்று கோழியை உயிருடன் விழுங்கிய போது அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கோழியை விட்டு மறைந்து சென்றது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பாபநாசம் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
Similar News
News February 26, 2026
திருநெல்வேலி: டிஜிட்டல் மயத்தில் இனி எல்லாம் சுலபம்

நெல்லை மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!
News February 26, 2026
நெல்லை விரைவு ரயில்களின் சேவை மாற்றம்

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக செங்கோட்டை – நெல்லை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் நெல்லை – எழும்பூர் நெல்லை விரைவு ரயில் வரும் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் வரும் மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.
News February 26, 2026
நெல்லை: பணத்தை திருப்பி பெறலாம்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


