News November 3, 2025
12 மணிக்கு மேல் வெளியே செல்லாதீங்க

பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த 5 நாள்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடியில் வரலாறு காணாத வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதால், 12 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
Similar News
News December 11, 2025
செங்கோட்டையன் என்னை எதிர்த்து போட்டியா? நயினார்

நயினார் நாகேந்திரன் எங்கு நின்றாலும், டெபாசிட் இழக்க செய்வதே நோக்கம் என KAS பேசியிருந்தார். இந்நிலையில், ‘செங்கோட்டையன் எனக்கு வேண்டியவர். அவருக்கு என் மீது என்ன கோபம் என தெரியவில்லை. TVK இன்னும் வளரவில்லை. எடுத்ததும் ஆட்சிக்கு வருவோம் என்றால், எப்படி நியாயம்?’ என நயினார் கேட்டுள்ளார். தன்னை டெபாசிட் இழக்க செய்ய, KAS நெல்லையில் போட்டியிடுகிறாரா என்பது பற்றி தெரியாது என்றும் அவர் கூறினார்.
News December 11, 2025
பெற்றோரின் தவறால் பறிபோன குழந்தையின் உயிர்

உ.பி.,யில் பெற்றோரின் அஜாக்கிரதையால் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இரவில் தங்களுக்கு நடுவில் படுக்க வைத்திருந்த குழந்தையை, தூக்கத்தில் இருவரும் தெரியாமல் நசுக்கியதால் மூச்சு திணறி இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைப்பதே சிறந்தது என்றும், மறந்தும் கூட பெற்றோர் பக்கத்தில் தூங்க வைப்பது தவறு என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
News December 11, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். லாரிகளுக்கு உயர்த்திய எஃப்சி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கை இன்று முதல் தொடங்கியுள்ளனர். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


