News October 16, 2024
12 கடைகளுக்கு ரூ.17ஆயிரம் அபராதம்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில், கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது உணவு பாதுகாப்பு மற்றும் தர உரிமம் சட்டத்தை மீறிய 12 கடைகளுக்கு அபராதமாக ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News November 20, 2024
திருப்பூர்: 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பம்
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் அரண்மனைத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
News November 20, 2024
திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பிரபல இயக்குநர் ஆதரவு
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படத்தைத் திரையிட வேண்டும். இரண்டு வாரக் காலத்திற்குப் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது” என கருத்து கூறிய நிலையில், திரைப்பட இயக்குநர் வசந்த பாலன், திருப்பூர் சுப்ரமணியன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
News November 19, 2024
திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.