News April 5, 2025
12வது பாஸ் போதும், ரூ.71,900 வரை சம்பளம்

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <
Similar News
News April 5, 2025
அங்கன்வாடி மையங்களில் 306 காலி பணியிடங்கள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர் 98 பேர், அங்கன்வாடி உதவியாளர் 208 பேர் என மொத்தம் 306 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சவுந்தரவல்லி அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் <
News April 5, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 5 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டட மேஸ்தி விஜயன் 54 என்பவரை ஆம்பூர் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 4, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து போலிசார் விவரம் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 4 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்