News April 1, 2025

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் 25,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News April 2, 2025

பல் சிகிச்சையால் தலைவலி: குடும்பத்தோடு சாலை மறியல்

image

காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கடந்த 07.12.2025 அன்று பல் வலி காரணமாக வேர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தீராத தலைவரால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் தலைவலி தீராததால் இன்று பல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 2, 2025

திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 4,5 ஆகிய தேதிகளில் திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து, மழைக்கான முன்னேச்சரிக்கையோடு இருங்கள்.

News April 2, 2025

திருச்சியில் 106 குற்றவாளிகள் கைது

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் பதவியேற்றது முதல் 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுமட்டும் அல்லாது, திருச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!