News April 7, 2025

12ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், நீக்குதல் மற்றும் புதிய குடும்ப அட்டை கோருதல் போன்றவற்றிற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2025

தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.07) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

தூத்துக்குடி பார் கவுன்சிலில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

தூத்துக்குடி நீதிமன்ற பார் கவுன்சிலில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

தூத்துக்குடியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

error: Content is protected !!