News April 5, 2025
12வது பாஸ் போதும், ரூ.71,900 வரை சம்பளம்

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <
Similar News
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்தை இன்று (15.12.2025) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இந்த நிகழ்வின் போது பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
News December 15, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், இன்று பெண் ஒருவர் தனது மகன், மருமகளுடன் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், கந்து வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், முழு தொகையையும் திருப்பி அளித்தும் மேலும் பணம் கேட்டு ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: EB பில் நினைத்து கவலையா??

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


