News April 10, 2025

12ஆம் தேதி ரேஷன் அட்டை குறைதீர்க்கும் முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று (ஏப்ரல் 9) விடுத்துள்ள செய்தி குறிப்பு: வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மனு அளித்து பலனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

நெல்லை இரவு நேர காவலர்கள் விவரங்கள் இதோ…

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக். 28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 28, 2025

முதல்வரின் நெல்லை பயணம்; விரிவான அலசல்

image

முதல்வர் முக ஸ்டாலின் இன்றிரவு கோவில்பட்டியில் கருணாநிதி சிலையை திறக்கிறார். 10.30 மணிக்கு நெல்லை வருகிறார். அரியநாயகிபுரத்தில் தங்கி விட்டு நாளை காலை 11க்கு தென்காசி சீவநல்லூர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 11.30க்கு ஆனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 12.45க்கு அமர் சேவா சங்கம் செல்கிறார். பகல் 1:30க்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் வரும் முதல்வர் மீண்டும் மாலை மதுரை செல்கிறார்.

News October 28, 2025

நெல்லையில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

image

மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகர ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 22.11.2015 அன்று ஆண்கள் 60 பேர் மற்றும் பெண்கள் 05 பேர் என மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விருப்பம் உள்ளவர்கள் ஆவணங்களுடன் நேரில் செல்லலாம். SHARE IT

error: Content is protected !!