News January 26, 2026
117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம்!

கடலூரில் இன்று 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கடலூர் மாவட்ட 117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்வில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Similar News
News February 6, 2026
கடலூர் : இனி டாக்டர் பீஸ் FREE..!

கடலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <
News February 6, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம்; சிறுவன் மீது வழக்கு!

ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனும், 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி கருவுற்றார். இதையறிந்த சிறுவனின் தாய் அச்சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


