News February 26, 2025
மத்திய அரசில் 1,161 Vacancy: ₹69,100 வரை சம்பளம்!!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன. கான்ஸ்டபிள் வேலைக்கு ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ₹69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <
Similar News
News February 27, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶ஆறு கிழக்கு நோக்கித்தான் போகும் என்றால் மேற்கே நோக்கி போகிறவன் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும்.
▶ பலமும் பலவீனமும் விலை நியாயத்தை பொறுத்ததே தவிர அசட்டுத் துணிச்சலும் இல்லை அஞ்சி நடுங்குவதிலும் இல்லை.
▶எல்லாம் பொய்யே என்று சொல்வதன் மூலம் உன்னை தானே ஏமாற்றிக் கொள்ள முடியும் உலகத்தை அல்ல.
▶நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான்
News February 27, 2025
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணி அபாரம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் 127/9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது வெற்றிபெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தனர்.
News February 27, 2025
மகா கும்பமேளா: மம்தா பானர்ஜி சந்தேகம்

144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மகா கும்பமேளா 2025இல் கொண்டாடுவதன் துல்லியத் தன்மை குறித்து நிபுணர்கள் சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2013இல் கும்பமேளா நடைபெற்ற நிலையில் தற்போது மகா கும்பமேளா நடத்தப்படுவது சரியானதா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.