News March 31, 2025
CISFஇல் 1,161 காலியிடங்கள்.. ஏப்ரல் 3ஆம் தேதி கடைசி

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) கான்ஸ்டபிள், ட்ரேட்ஸ்மேன் உள்ளிட்ட 1,161 காலியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு www.cisfrectt.cisf.gov.in. இணையதளத்தில் 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 3ஆம் தேதி கடைசி நாளாகும். வேலைக்கான கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியும், வயது தகுதியாக 18-23 வயது வரையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
இளைய தலைமுறைக்கு வழிவிடுங்க: நிதின் கட்கரி

முக்கியப் பொறுப்புகளை இளைய தலைமுறையினா் ஏற்கும் வகையில், பழைய தலைமுறையினா் ஓய்வை அறிவித்து அவா்களுக்கு வழிவிட வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். நாகபுரியில் நடைபெற உள்ள தொழில் முதலீட்டு மாநாடு முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பழைய தலைமுறையினா் படிப்படியாக பொறுப்புகளிலிருந்து விலகி, அனைத்தும் சரிவர செயல்படத் தொடங்கும்போது, ஓய்வுபெற வேண்டும் என்று கூறினார்.
News January 19, 2026
ஒற்றை காலில் நிற்பது மிகவும் நல்லது

ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல் தோன்றினாலும், அது உடல் சமநிலை, தசை வலு, மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வயதுடன் குறையும் தசை இழப்பு, கீழே விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது. தினசரி பழக்கங்களில் இதைச் சேர்த்தால், உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.
News January 19, 2026
₹3.25 லட்சம் கோடிக்கு ரபேல் விமானங்களை வாங்க முடிவு

பிரான்ஸிடம் இருந்து ₹3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த 114 விமானங்களில் 12-18 மட்டுமே வாங்கப்பட்டு, மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்காக பிரான்சின் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கும்.


