News February 16, 2025
மேலும் 116 இந்தியர்கள் USA-வில் இருந்து நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை டிரம்ப் அரசு வெளியேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 116 இந்தியர்களுடன் நேற்றிரவு அமெரிக்காவில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரசுக்கு 2ஆவது விமானம் வந்தது. ஏற்கெனவே கடந்தவாரம் 104 இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதையடுத்து 3ஆவது கட்டமாக விரைவில் மேலும் 157 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
Similar News
News March 6, 2026
‘மக்கள் தொகை 2027’ சின்னம் அறிமுகம்

மக்கள் தொகை 2027 பணிகள் ஏப்.1-ல் துவங்கும் நிலையில், அது முற்றிலுமாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இப்பணிக்கான புதிய பிரசார உருவ சின்னங்களையும், ஹவுஸ் லிஸ்டிங் பிளாக் கிரியேட்டர், HLO ஆப், செல்ப் எனுமெரேஷன் போர்டல், சென்செஸ் மேனேஜ்மெண்ட் & மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட 4 அம்சங்களை அமித்ஷா அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி, மக்கள் தங்களது சுயவிவரங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம்.
News March 6, 2026
கருப்பு கவுனி அரிசி நன்மைகள்

அதிக நார்ச்சத்து, குறைவான கலோரிகள் & கார்போஹைட்ரேட் கொண்ட கருப்பு கவுனி அரசியை, சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதிக நார்ச்சத்து காரணமாக குடல் இயக்கத்திற்கும், வயிற்றுப்புண்களை குணமாக்குவதற்கும் உதவுகிறது. கல்லீரல் நச்சுகளை நீக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற, BP பிரச்னையை தீர்க்க கருப்பு கவுனி அரிசியில் பொங்கல், லட்டு போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
News March 6, 2026
மார்ச் 6: வரலாற்றில் இன்று

*1790 – ஆங்கிலேயர்களால் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது *1967 – தமிழகத்தில் திமுக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது *1972 – இயக்குநர் கரு.பழனியப்பன் பிறந்தநாள் *2009 – அரசியல்வாதி சோ.அழகர்சாமி நினைவு நாள் *2016 – நடிகர் கலாபவன் மணி நினைவு நாள் *2019 – நடிகர் டைப்பிஸ்ட் கோபு நினைவு நாள்


