News February 11, 2025
1,124 காலிப் பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.<
Similar News
News April 11, 2026
கிருஷ்ணகிரி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சூளகிரி அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு இளம்பெண் குளியல் அறைக்கு சென்றார். அப்போது நவீன் என்பவர் இளம்பெண் சென்ற குளியல் அறைக்குள் சென்று பாலியல் தொந்தர கொடுத்துள்ளார். அந்த இளம்பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நவீனை பிடித்து சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நவீனை கைது செய்தனர்.
News April 11, 2026
கிருஷ்ணகிரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஊத்தங்கரை பாண்டவர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் தாரணி (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாரணி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.