News December 9, 2024

மத்திய அரசில் 110 காலி இடங்கள்: ₹90,000 வரை சம்பளம்.

image

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC)ல் 110 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மென்பொருள் என்ஜினியர்கள், தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வுகள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.12.2024. சம்பளம் – ₹50,925 – ₹96,765 வரை வழங்கப்படும். https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 30, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88.19ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமனிய மக்களை கடுமையாக பாதிக்கும்.

News August 30, 2025

கண்டிப்பாக Ro- Ko 2027 ODI உலககோப்பை விளையாடணும்..

image

ரோஹித், கோலி 2027 ODI WC தொடரில் விளையாடுவார்களா என்பது தான் தற்போதைய கேள்வி. இந்த நிலையில்தான், Ex வீரர் சுரேஷ் ரெய்னா, ரோஹித்- கோலி இருவரும் 2027 ODI WC விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். இருவருக்கும் நிறைய அனுபவம் இருப்பதாலும், ஏற்கெனவே T20 WC & சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளதாலும், 2027 ODI WC தொடருக்கான அணியில் கண்டிப்பாக இருவரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். நீங்க என்ன சொல்றீங்க?

News August 30, 2025

‘சாதிவாரி வாட்ஸ்அப் குழுக்களில் அரசு அதிகாரிகள்’

image

போலீஸார், ஆசிரியர்கள், வருவாய் துறையினர் சாதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்களை நடத்துவதாக சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகளுக்கு, அரசு நிர்வாகத்தின் அணுகுமுறைதான் காரணமென அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசின் உயர் பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!