News September 27, 2025
முதலமைச்சர் பாதுகாப்புக்காக 110 AI கேமராக்கள்

சென்னையில் உள்ள CM ஸ்டாலின் வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 110 AI கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் கமிஷனர் ஆபிஸில் அமைக்கப்படுகிறது. சந்தேகத்துக்குரிய நபர்கள் CM வீட்டருகே சென்றாலோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி சென்றுவிடுமாம்.
Similar News
News September 27, 2025
Cinema Roundup : கோடிகளில் புரளும் சாய் அபயங்கர்

*பவன் கல்யாணின் ‘OG’ படம் முதல் நாளில் ₹154 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு. * மலையாள படமான பல்டிக்கு சாய் அபயங்கர் ₹2 கோடி வாங்கியதாக தகவல். * நானியின் ‘தி பாரடைஸ்’ அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு. *அனுஷ்காவின் ‘GHAATI’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
News September 27, 2025
முதுகு தசைப்பிடிப்பு குணமாக இந்த யோகா பண்ணுங்க!

✱அர்த்த பிஞ்சா மயூராசனம் செய்வதால் தோள்பட்டை, முழங்கை எலும்புகள், முதுகுத்தண்டு பலப்படும் ✱இதை செய்ய முதலில், முட்டி போட்டு தரையில் அமரவும் ✱கைகளை தரையில் ஊன்றி(படத்தில் உள்ளது போல), மெதுவாக முன்னோக்கி குனியவும் ✱முழங்கால் இட்ட நிலையில் இருந்து எழுந்து, இரு கால்களை தரையில் பதித்து, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும் ✱இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருக்கலாம். SHARE IT.
News September 27, 2025
சீமானுக்கு அடிப்படை நாகரிகம் தெரியவில்லை: அதிமுக

அண்ணா, எம்.ஜி.ஆரை பற்றி இழிவாகப் பேச சீமானுக்கு தகுதியில்லை என அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இரண்டு சனியன்களை சேர்த்து விஜய் சட்டை தைத்துவிட்டதாக அவர் பேசிய நிலையில், மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை என அதிமுக சாடியுள்ளது. திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.