News September 19, 2024

11 ஆண்டுகளுக்கு முன்பே பேஜர்க்கு இந்தியா மூடுவிழா

image

இந்தியாவில் 1990 ஆரம்பத்தில் பேஜர் சேவை அறிமுகமானது. மருத்துவம், போலீஸ், செய்தித்தாள் துறை அனைத்திலும் உடனடி தகவலுக்கு அதை பலரும் பயன்படுத்தினர். 1995களில் அறிமுகமான செல்போன் சேவை, பேஜர் சேவையையும் சேர்த்து SMS ஆக வழங்கியதால் வரவேற்பு குறைந்தது. இதனால் நாளடைவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை சரியவே, 2013 மத்தியில் பேஜர்க்கு மூடுவிழா நடத்தப்பட்டது. பேஜர் சத்தம் ஓய்ந்து இந்தியாவில் 11 ஆண்டுகளாகி விட்டன.

Similar News

News August 10, 2025

SPORTS ROUNDUP: மெஸ்ஸி வருகை ரத்து!

image

➤சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்: 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, எம்.பிரனேஷ் ஆகியோர் வெற்றி.
➤சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் சின்னர்(இத்தாலி), சிட்சிபாஸ்(கிரீஸ்) வெற்றி.
➤அக்டோபர்- நவம்பரில் கேரளா வரவிருந்த மெஸ்சி, அர்ஜென்டினா அணியின் வருகை ரத்து.
➤முதல் ODI: ஹசன் நவாஸ் அதிரடியில் PAK வெற்றி. முதலில் ஆடிய WI 280 ஆல் அவுட். PAK 284/5.

News August 10, 2025

ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? காங்., MP கேள்வி

image

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின் ஜக்தீப் தன்கரை ஏன் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என காங்., MP கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா எனவும், அவர் இருக்கும் இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்கருடன் எந்த தொடர்பும் இல்லாததால் நாட்டு மக்கள் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் மமிதா

image

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு ஒப்பந்த செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அட்லியின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, அர்ஜித் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

error: Content is protected !!